அட்சய திருதியை அன்று சூரிய பகவானை துதிக்கக்கூடிய 108 நாமாவளி

அட்சய திருதியை அன்று சூரிய பகவானை துதிக்கக்கூடிய, கீழ்கண்ட 108 நாமாவளியை தவுமியர் யுதிஷ் டிரருக்கு கூறியதாகவும், இதை யுதிஷ்டிரர் சூரிய பக வானை பார்த்து கூறியதாகவும் சொல்வார்கள்.




1. சூரிய, 

2. அர்யமா, 

3. பக, 

4. த்வஷ்டா, 

5. பூஷா, 

6. அர்க, 

7. சவிதா, 

8. ரவி, 

9. கபஸ்தி மான், 

10. அஜ, 

11. கால, 

12. ம்ருத்யு, 

13. தாதா, 

14. ப்ரபாகா,

15. ப்ருத்வீ, 

16. ஆப், 

17. தேஜ், 

18. க (ஆகாஷ்), 

19. வாயு, 

20. பராயண், 

21. ஸோம், 

22. ப்ருகஸ்பதி, 

23. சுக்ர, 

24. புத, 

25. அங்காரக, 

26, இந்திர, 

27. விவஸ் வான், 

28, தீப்தாம்சு, 

29. சுசி, 

30. சவுரி, 

31. சனைஸ்சர், 

32. பிரம்மா, 

33. விஷ்ணு, 

34. ருத்ர, 

35, ஸ்க்ந்த, 

36.வருண, 

37.யம, 

38.வைத்யுதாக்நி, 

39. ஜடாராக்னி, 

40. ஐந்தநாக்னி, 

41. தேஜபதி, 

42. தர்மத்வஜ, 

43. வேத கர்த்தா, 

44. வேதாங்க, 

45. வேதவா ஹன், 

46. க்ருத, 

47. த்ரேதா, 

48. துவா பர, 

49. சர்வமலாச்ர்ய கலி, 

50. கலா காஷ்டா முஹூர்த்த ரூப சமய, 51. ராத்ரி, 

52.யாமம், 

53, க்ஷணம், 

54. ஸம்வத் ஸரகர், 

55. அச்வத்த, 

56.காலசக்ரப்ரவர்த்தக விபாவசு, 57.ஸாஸ்வத புருஷ், 

58. யோகி, 

59. வ்யக்தாவ் யக்த, 

60. சனாதன, 

61. காலாத்யக்ஷ, 

62. ப்ரஜாத்யக்ஷ, 

63. விசுவகர்மா, 

64. தமோனுத், 

65. வருண, 

66. சாகர,

67.ஜீமுத,

68.அம்சு,

69. ஜீவன், 

70. அரிஹா, 

71. பூதாச் ரய, 

72.பூதபதி, 

73. சர்வலோக நமஸ்க்ருத, 

74.சரஷ்டா, 

75. சம்வர்தக, 

76. வஹ்னி, 

77. சர்வாதி, 

78. அலோலுப, 

79. அனந்த, 

80, கபில, 

81. பானு, 

82, காம்த, 

83. சர்வதோ முக, 

84, ஜய, 

85. விசால, 

86. வரத, 

87. சர்வதாது, நிஷேசிதா, 

88. மனசுபர்ண, 

89. பூதாதி, 

90. சீக்ரக, 

91. ப்ராணதாரக, 

92. தன்வந் திரி, 

93. தூமகேது, 

94. ஆதிதேவ, 

95. அதிதி சுத, 

96. த்வாதசாத்மா, 

97. அரவிந்தாக்ஷ, 

98. பிதா-மாதா பிதா மஹ, 

99.ஸ்வர்கத்வார ப்ரஜாத்வார், 100.மோக்ஷத்வார த்ரிவிஷ்டப, 

101. வேத கர்த்தா, 

102. ப்ரசாந்தாத்மா, 

103. விஸ் வாத்மா, 

104. விசுவதோமுக, 

105. சராச ராத்மா, 

106. சூக்ஷமாத்மா, 

107, மைத் ரேய, 

108.கருணான்வித


அட்சய திருதியை அன்று சூரிய உதய நேரத்தில் நல்ல சிந்தனையுடன் இந்த நாமாக்களை சொல்லி சூரிய பகவானை வணங்குபவர்களுக்கு நல்ல மண வாழ்க் கையும் மக்கள் செல்வம் மற்றும் தன தானியங்களும் கிடைக்கும். முற்பிறவி யில் நன்மைகளை அதிகம் செய்தவருக்கு இந்த துதியை சொல்ல வேண்டும் என்ற சிந்தனை உண்டாகும் என்று கூறுவார்கள், இன்று செய்யக்கூடிய நல்ல காரியங்கள், தான, தர்மங்களை பல மடங்காக சூரிய பகவான் அருளால் இந்த துதியை கூறி பெற முடியும்.

மன்னராக மாற்றிய தண்ணீர் தானம்

அட்சய திருதியை அன்று தண்ணீர் தானம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சியில் சிக்கித் தவித்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று அவனது நாட்டை, எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னன் எதிரிகளின் கையில் சிக்காமல், தன் மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். அங்கு சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம், 'என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டான். பூர்வ ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே போல் அட்சய திருதியை தினத்தில் நீ செய்த தண்ணீர் தானம்தான், உன்னை மன்னராக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் நீ செய்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டும்' என்றனர்.


    இதையடுத்து அந்த மன்னன் காட்டில் வசித்தபடி, நாராயணரை நினைத்து தியானம் செய்து வந்தான். மேலும் அட்சய திருதியை நாளில், வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான்.


    மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப்படியே வரம் கொடுத்தார்.

    பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆகும். அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள் சிலர் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.


செல்வம் அருளும் அட்சய திருதியை | Akshaya Tritiya 2024

    சிந்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும், அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்பு மிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.




    வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சிய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவ பெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று. பிரம்ம ஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.





    தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தாம் செய்தால், அது பலமடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த முதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

விரதம் இருக்கும் முறை


அட்சய திருதியை தினத்தில் அதிகாயை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைந்து, சந்தனம், குங்கும் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகையை வைத்து, அதன் மீது கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

அட்சய திருதியை - தானங்கள்


அட்சய திருதியை நானில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மாரணத்தைத் தடுக்கலாம், கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவவிமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.