சோமவார பிரதோஷம்

மவ சிவ. 
நேற்று திங்கட்கிழமை (24.05.2021), தேனி மாவட்டம்,  பெரியகுளத்தில் ஈச்சமலை மகாலட்சுமி சித்தர் பீடத்தில் சோமவாரப் பிரதோஷம் சிறப்பாக நடந்தது. பிரதோஷம் என்றால் நம் நினைவுக்கு வருவது சிவபெருமானும் நந்திதேவரும் தான் திங்கட்கிழமை என்றாலே சிவனுக்கு உகந்த நாள். இந்நாளில் வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்பர். இந்தப் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் நன்மைகள் பல உண்டாகும். பிரதோஷம் என்றாலே கோவிலுக்கு சென்று சிவபெருமானுடைய தரிசனம் காண்பது என்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்ப இருக்க காலகட்டத்தில் இந்த ஊரடங்கு நேரத்தில் நம்மால் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை என்றாலும் நம் வீட்டில் இருந்தபடியே இறைவனை தரிசிக்கலாம். உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் இறைவனை காணலாம். 

நாம் அனைவரும் இந்தப் பிரதோஷ பூஜையைக் கண்டு இறையருள் பெறுவோம் மற்றும் ஆரோக்கியமாக இருப்போம். வீட்டிலிருந்தே இறைவனை தரிசித்து நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் பெறுங்கள்.  இந்த லிங்கை கிளிக் செய்து பிரதோஷ பூஜை காணுங்கள்.
புண்ணியம் அடையுங்கள். 
மவ சிவ.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.