சந்தோஷமான பயணம் வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்!!! | Jolly Trip!!!

மவ சிவ.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்று சொன்னால் முதலில் தோன்றுவது அவர்களின் முகத்தில் சந்தோஷம் தான். சுற்றுலா என்பது  நமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களை கண்டு களிக்க பயணித்தலே ஆகும். வேலை, பணம், பதவி  என்று இப்ப இருக்கும் காலகட்டத்தில் ஓடிக்கொண்டே இருப்பதால் நமக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்க முடியவில்லை, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம். அத்தகைய வகையில் ஒரு நாள் கிடைத்தால் ஊர் சுற்றி பார்க்கலாம் என்ற ஆசைகள் தோன்றும். அத்தகைய வாய்ப்பு கிடைத்துவிட்டால் மன அமைதிக்காகவும், மன நிம்மதிக்காகவும், வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்படுவதற்காகவும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளுகிறோம். பயணங்கள் எதுவாகவும் இருக்கலாம், ஒரு மலைப்பகுதி சுற்றுலா ஆகவும் இருக்கலாம், கோயிலுக்கு சென்று இறைவனையும் தரிசிக்கலாம் அல்லது ஒரு பூங்கா சுற்றுலா ஆகவும் இருக்கலாம். சுற்றுலா இடங்களுக்கு செல்வது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பங்கள். 

சுற்றுலா செல்லும்போது ஒவ்வொருவருடைய ஆசையும், சந்தோஷமாக சென்று சந்தோஷமாக திரும்ப வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லா நேரமும் அது சாத்தியமாக படவில்லை. 

"தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் சுற்றுலா செல்லும்போது ஒரு சில திட்டங்களை மேற்கொண்டு செல்லுவோம். ஆனால் ஒரு சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனால் பயணங்களின் பாதியிலேயே நாம் நம்முடைய சந்தோஷங்களை அனுபவிக்க முடியவில்லை. இதற்கு ஒரு பரிகாரம் இருக்கு அதை நாம் செய்வதால் சுற்றுலா பயணங்கள் செல்லும்போதும், திரும்பி வரும்போதும், சந்தோஷத்துடன் நம் பயணத்தை  அனுபவிக்கலாம்.

எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் இருக்க, வெளியே செல்லும் முன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெண்ணெய் கொடுத்து விட்டு பயணத்தை தொடங்க வேண்டும்.

பின்பு, நம்முடைய பயணம் சிறப்பாகவும், நாம் நினைக்காத அளவுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
மவ சிவ.

Make your trip Joyful & Memorable!

Most of us to get a relaxation and to get rid of monotous life plans, we decide to go for a trip. The destination place may be a hill station or a tourism spot or may be some other places. It depends upon the opinion of the each individuals.

Everyone's wish that the trip they start should be a nice and smooth one. But it is not the same everytime...

As the saying goes ' Man proposes and god disposes' many of us plans for a trip but some unexpected things happens in middle of our trip. To avoid these incidents and to make our journey a pleasant one, just follow this tip.

Go to Anchaneya temple and offer Butter.. Then start your trip. Your trip will be a smoothest one you have ever experienced..

Mavasiva.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.