மவசிவ
மஞ்சள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது மங்களம் தான். மஞ்சள் என்பது ஒரு மங்களகரமான பொருள் ஆகும். ஒவ்வொரு மங்களகரமான விஷயங்களில் முதன்மையாக விளங்குவது மஞ்சள் தான். எவர் ஒருவர் மஞ்சளை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் மனம், திடம், பொருள் எல்லாமே கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஒருவர் வெளியே செல்லும்போது மஞ்சள் கொம்பை தன் கைப்பையில் வைத்து எடுத்து சென்றால் மங்களகரமான செய்தி வரும் மற்றும் பணவரவு அதிகரிக்கும். குழந்தைகளாக இருந்தால் முக்கியமாக பெண் குழந்தைகள் தங்களது பையில் அல்லது ஜாமென்ட்ரி பாக்ஸில் சிறிய மஞ்சகொம்பை வைத்து சென்றால் யோகம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஒரு சிலருக்கு எந்த நேரமும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும், அப்போது அந்த நேரத்தில் இந்த மஞ்சள் கொம்பை ஒரு விளக்கெண்ணை திரிபோட்டு அந்த விளக்கெண்ணெய் திரியில் இருந்து வரக்கூடிய நெருப்பில் இந்த மஞ்சள் கொம்பை காண்பிக்க வேண்டும். அவ்வாறு காண்பிக்கும் போது புகை ஒன்று வரும். அந்தப் புகையை நாம் இரண்டு நிமிடங்கள் நுகர வேண்டும். அவ்வாறு நுகர்வதால், நம் உடம்பில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். நம் உடலும் மனதும், ஆரோக்கியமாக காணப்படும்.

Thank u .
ReplyDeleteMavasiva.
Really it's useful for students and who affected by negative energy.