Husband & Wife misunderstanding!!! | கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க !

 மவ சிவ

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள்!  அப்படியிருந்தாலும் எல்லா திருமணங்களும் சந்தோஷமான சூழ்நிலையில் முடிவதில்லை. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி. திருமண பந்தத்தில்  ஈகோ முதலிடத்தில் இருக்கும் பட்சத்தில்  தவறான புரிதல் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. அப்படிப்பட்ட ஈகோ இருக்கும் இடத்தில் மன அழுத்தம், விரக்தி, அவ நம்பிக்கை, குறைந்து வரும் மரியாதை, பயனற்ற தொடர்பு மற்றும் தம்பதியினரிடையே மாற்றங்கள் ஆகியவை அதிகரித்து மென்மையான திருமண பிணைப்புகளை பலவீனப்படுத்துகின்றன.

விவாகரத்து காலகட்டத்தில் விவாகரத்துக்கு முன்பு திருமண பந்தத்தின்  உறவை மேம்படுத்த அதற்கான முயற்சிகளை எடுப்பதற்காக ஆலோசனை அணுகுகிறோம். திருமண உறவை பற்றி ஒரு ஆலோசகரை பார்ப்பது நிச்சயமாக ஒரு சில நன்மைகளை நமக்கு அளிக்கிறது. ஆலோசகர் நம்மிடம்  இருக்கும் தவறான புரிதல் மற்றும்  கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்திய சூழ்நிலைகளை அடையாளம் காணவும், அவர்களின் சிந்தனை செயல் முறையை மாற்றும்படியும்  சொல்கிறார்கள்.  ஆனால் அது எப்போதும் உள் காரணத்தை  அகற்ற அவர்களுக்கு எளிதாக உதவுவதில்லை. 

திருமண பந்தங்கள் ஒரு சில தோஷங்கள் அல்லது சில தவறுகள் நடப்பதால் பிரிவில் முடிவடைகிறது. அது அவர்களின் திருமண தேதியை கூட சொல்லலாம். திருமண தேதிகள் ஒரு பிரிவில் முடிவடையும். ஒரு சில திருமண தேதிகள் தம்பதிகளுக்கு பொருந்தாது. திருமண பந்தங்களில் அன்பு அதிகரிக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள். 

இந்த பரிகாரம் எல்லா  மக்களும் பின்பற்றலாம். 

10 அங்குல உயரமுள்ள இரண்டு மூங்கில்களை  எடுத்து புதியதாக வாங்கிய மஞ்சள் துணியால் கட்டவும், குங்குமம் மஞ்சளும் போட்டு இடையில் தாமரை இதழை வைக்கவும். தொடர்ந்து மூன்று பவுர்ணமிக்கு இந்த மூங்கில்களை  வழிபட்டு, பின்பு ஓடும் நீரில் விடவும். 

தங்கள் மனைவியை புரிந்து கொள்ளாத கணவர்களும், கணவனை புரிந்து கொள்ளாத மனைவிகளுக்கும் இது ஒரு எளிய தீர்வாகும். இதை செய்தால் தம்பதிகளுக்கு இடையே உள்ள தவறான புரிதல் மறைந்து அவர்களின் வாழ்நாள் முழுவதும் காதல் மேலோங்கும்.

Husband & Wife Misunderstanding!!! Simple remedy.

Marriages are made in heaven'.. though the saying goes so, not all the marriages ends with a heavenly atmosphere. No matter its love marriage or an arranged one, misunderstanding occurs every now and then where Ego is at the top from both the sides.Years of increasing stress, frustration, distrust, declining respect, ineffective communication, between couple debilitate tender marriage bonds.

Pre-divorce period also include attempts to heal the marriage with various remedies, including counseling. Seeing a counselor about relationship definitely has its benefits. A counselor can sometimes help both partners to identify the situations that have caused misunderstanding and disagreements and ask them to modify their thinking processes. But it can't always easily help them in eliminating the inner cause.

There will be some dosham or some mistakes that might have taken place say their marriage date itself!!! Some marriage dates won't suit the couple which ends up in a separation. Here is a simple remedy which all couple can follow irrespective of their caste and creed.

Take two bamboos of 10 inches height and tie that with a new bought yellow cloth. Put kumkum and turmeric and insert a lotus petal in between. Worship this bamboo for three continuous Full Moon Day and leave it in running water. 

This is a simple remedy for those couple who doesn't understand their spouse. If this done, then the misunderstanding between couples will vanish and love will prevail throughout their life time.

Mava Siva.

திருமணம் தாமதமாகிறதா, இதை செய்யுங்கள்...|Simple remedy for the delay in Marriage

 மவ சிவ.                                                                                                                                            

திருமணம் என்பது தனிநபர்களுக்கிடையில் மட்டுமல்லாமல் குடும்பங்களுக்கிடையேயான ஒப்பந்தமாகும். குடும்பங்களில் உள்ள பெரியவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன், “பெண்ணின் / பையனின்” பெற்றோர் குடும்ப பின்னணியை விசாரிக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவை, ஒப்பிடக்கூடிய நிதி நிலைமை கொண்டவை, பெரியவர்களிடையே நல்ல பெயர் பெற்றவை என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். ஆனால் சிலர் சரியான வயதைத் தாண்டிய பிறகும் தங்களின் சிறந்த பாதிக்காக ஏங்குகிறார்கள். 

அவர்களின் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இதற்கு ஒரு சிறந்த பரிகாரம் இருக்கிறது. 

அடர்த்தியான மூங்கில் மரங்கள் காணப்படும் இடத்திற்குச் செல்லுங்கள். மரத்தின் ஏதேனும் ஒன்றில், அதில் ஒரு வெள்ளைத் துணியையோ அல்லது மஞ்சள் துணியையோ கட்டவும். பின்னர் அதை உங்களுக்கு பிடித்த கடவுளாக நினைத்து மனதார பிராத்தனை செய்யுங்கள். இதைச் செய்யும்போது, "குருவின்" ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கும், உங்கள் தோஷம் அனைத்தும் சரிசெய்யப்படும். இதை ஒரு முறை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள். 

மவ சிவ.

Simple remedy for the delay in Marriage.

Mavasiva.

A marriage is a contract between families, not just between individuals. The girl's/boy's parents investigate the family background before initiating the talks between the elders in the families. They would like to ascertain that the each family is of the same class, is of comparable financial standing, is of good reputation among the elders. But some people after crossing their right age still stand alone longing for their better half.....

There must be some dosham in their horoscope. Don't worry, Here is a simple remedy.

Go to a place where thick bamboo trees are seen. In any one of the tree, tie a white cloth or an yellow cloth to it. Then think it as your favourite god and pray heartfully. While doing this, GURU's blessing will be with you and all your dosham will get rectified. Try this once and feel the difference.

Mavasiva.

சந்தோஷமான பயணம் வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்!!! | Jolly Trip!!!

மவ சிவ.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்று சொன்னால் முதலில் தோன்றுவது அவர்களின் முகத்தில் சந்தோஷம் தான். சுற்றுலா என்பது  நமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களை கண்டு களிக்க பயணித்தலே ஆகும். வேலை, பணம், பதவி  என்று இப்ப இருக்கும் காலகட்டத்தில் ஓடிக்கொண்டே இருப்பதால் நமக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்க முடியவில்லை, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம். அத்தகைய வகையில் ஒரு நாள் கிடைத்தால் ஊர் சுற்றி பார்க்கலாம் என்ற ஆசைகள் தோன்றும். அத்தகைய வாய்ப்பு கிடைத்துவிட்டால் மன அமைதிக்காகவும், மன நிம்மதிக்காகவும், வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்படுவதற்காகவும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளுகிறோம். பயணங்கள் எதுவாகவும் இருக்கலாம், ஒரு மலைப்பகுதி சுற்றுலா ஆகவும் இருக்கலாம், கோயிலுக்கு சென்று இறைவனையும் தரிசிக்கலாம் அல்லது ஒரு பூங்கா சுற்றுலா ஆகவும் இருக்கலாம். சுற்றுலா இடங்களுக்கு செல்வது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பங்கள். 

சுற்றுலா செல்லும்போது ஒவ்வொருவருடைய ஆசையும், சந்தோஷமாக சென்று சந்தோஷமாக திரும்ப வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லா நேரமும் அது சாத்தியமாக படவில்லை. 

"தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் சுற்றுலா செல்லும்போது ஒரு சில திட்டங்களை மேற்கொண்டு செல்லுவோம். ஆனால் ஒரு சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனால் பயணங்களின் பாதியிலேயே நாம் நம்முடைய சந்தோஷங்களை அனுபவிக்க முடியவில்லை. இதற்கு ஒரு பரிகாரம் இருக்கு அதை நாம் செய்வதால் சுற்றுலா பயணங்கள் செல்லும்போதும், திரும்பி வரும்போதும், சந்தோஷத்துடன் நம் பயணத்தை  அனுபவிக்கலாம்.

எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் இருக்க, வெளியே செல்லும் முன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெண்ணெய் கொடுத்து விட்டு பயணத்தை தொடங்க வேண்டும்.

பின்பு, நம்முடைய பயணம் சிறப்பாகவும், நாம் நினைக்காத அளவுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
மவ சிவ.

Make your trip Joyful & Memorable!

Most of us to get a relaxation and to get rid of monotous life plans, we decide to go for a trip. The destination place may be a hill station or a tourism spot or may be some other places. It depends upon the opinion of the each individuals.

Everyone's wish that the trip they start should be a nice and smooth one. But it is not the same everytime...

As the saying goes ' Man proposes and god disposes' many of us plans for a trip but some unexpected things happens in middle of our trip. To avoid these incidents and to make our journey a pleasant one, just follow this tip.

Go to Anchaneya temple and offer Butter.. Then start your trip. Your trip will be a smoothest one you have ever experienced..

Mavasiva.

செவ்வாய் தோஷமா ! இனி கவலை வேண்டாம்... | Remedy for Sevvai Dosham!!!

மவ சிவ..

செவ்வாய் தோஷம் என்பதை மாங்கல்ய தோஷம், குஜா தோஷம் என்றும் கூறுவார்கள். இது மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் இதை செவ்வாய் தோஷம் என்று அழைக்கிறார்கள். ஒன்பது கிரகங்களில் ஒன்றானது தான் செவ்வாய் சிவப்பு கிரகம், இந்த கிரகத்தை ஆங்கிலத்தில் மார்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிரகம் அங்காரகன் என்ற ஒரு இந்துக் கடவுளின் பெயராகும். 

  முக்கியமான கிரகம் இந்த செவ்வாய் கிரகம். இது வாழ்வின் முக்கியமான சந்தர்ப்பத்தை தீர்மானிக்கிறது. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட நபர் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர் கொள்வார்கள். குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் அவர்களின் ஜாதகத்தில், செவ்வாய் தோஷம் பெற்றவர் இந்த தோஷம் கொண்ட அதே நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், திருமணத்திற்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க இது ஒரு ஆபத்தான வழி ஆகிவிடும்.

 செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம். செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட ஒரு எளிய சக்தி வாய்ந்த வழிகள் இருக்கு. இந்த பரிகாரத்தை செய்தால் செவ்வாய் தோஷம் படிப்படியாக சரிசெய்யப்படும். இந்த தோஷ பரிகாரம் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல், எல்லா மக்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அவர்கள் ஒரு ஹிந்து ஒரு முஸ்லீம் அல்லது ஒரு கிறிஸ்துவர் ஆகவும் இருக்கலாம். 

செவ்வாய் தோஷம் கொண்ட ஒருவர் தங்கள் வழிபாட்டு இடத்திற்கு சென்று அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு 9 சிவப்பு ஆப்பிள்களை வழங்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களின் தோஷம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆப்பிள்களை வெட்டிக் கொடுக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


ஒன்பது நபர்களுக்கு ஒரு முழு ஆப்பிளை வழங்குங்கள். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷம் படிப்படியாக சரி செய்யப்படும்.

மவ சிவ..

Remedy for Sevvai Dosham!!!

Sevvai Dosham is also popularly known as Mangal Dosham, Kuja dosha or Bhauma dosha. In tamil nadu Tamilians call it as Sevvai Kuttram. Sevvai, the red planet among nine planets and is called as Planet Mars in English and is a Hindu God named Angarakan. It is an important planet which decides the important occasion in ones life..

The person affected by sevvai Doshan will be facing so many difficulties in life, especially the unmarried ladies. The one who got sevvai dosham in their horoscope should get married to the same person having this dosham. Or else its a risky way to start a new life after marriage.

Still, don't worry here is a simple but powerful way to get rid of sevvai dosham. This dosha parihaar is common to all people irrespective of their religion. They may be a hindu, a muslim or a christian. 

One having sevvai dosham should go to their worship place and offer NINE RED APPLES to the beggers over there. If they do so, then their dosham will be rectified gradually. But remember these apples should not be cut and given. Offer one full Apple to nine persons.

Mavasiva.

சோமவார பிரதோஷம்

மவ சிவ. 
நேற்று திங்கட்கிழமை (24.05.2021), தேனி மாவட்டம்,  பெரியகுளத்தில் ஈச்சமலை மகாலட்சுமி சித்தர் பீடத்தில் சோமவாரப் பிரதோஷம் சிறப்பாக நடந்தது. பிரதோஷம் என்றால் நம் நினைவுக்கு வருவது சிவபெருமானும் நந்திதேவரும் தான் திங்கட்கிழமை என்றாலே சிவனுக்கு உகந்த நாள். இந்நாளில் வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்பர். இந்தப் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் நன்மைகள் பல உண்டாகும். பிரதோஷம் என்றாலே கோவிலுக்கு சென்று சிவபெருமானுடைய தரிசனம் காண்பது என்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்ப இருக்க காலகட்டத்தில் இந்த ஊரடங்கு நேரத்தில் நம்மால் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை என்றாலும் நம் வீட்டில் இருந்தபடியே இறைவனை தரிசிக்கலாம். உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் இறைவனை காணலாம். 

நாம் அனைவரும் இந்தப் பிரதோஷ பூஜையைக் கண்டு இறையருள் பெறுவோம் மற்றும் ஆரோக்கியமாக இருப்போம். வீட்டிலிருந்தே இறைவனை தரிசித்து நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் பெறுங்கள்.  இந்த லிங்கை கிளிக் செய்து பிரதோஷ பூஜை காணுங்கள்.
புண்ணியம் அடையுங்கள். 
மவ சிவ.

சோமவார பிரதோஷம்.

மவ சிவ

 Pradosham Pooja / இன்று நடந்த நிகழ்வுகள் / #பிரதோஷம் பூஜை @Mahasreerajhan a.s @Mavasiva ​ 

https://youtu.be/sOd46kDrPXI

See this video and get the blessings of God during this lockdown time. Let all pray to God to stay healthy and stay safe mavasiva.


Don't miss to share this video with ur friends and relatives.


 இந்த ஊரடங்கு நேரத்தில் நாம் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறையருள் பெறுவோம் மற்றும் ஆரோக்கியமாக இருப்போம் !!!

வீட்டிலிருந்தே இறைவனை தரிசித்து நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வம் பெறுங்கள் மவசிவ.👇🏻👇🏻👇🏻

https://youtu.be/sOd46kDrPXI