நமஸ்காரம் நமஸ்காரம்
மவ சிவ மா சி ந 18.10.2023 புதன்கிழமை ஐப்பசி ஒன்றில் வரக்கூடிய முதல் அனுஷ நட்சத்திரம் அன்று காலை 10:45 - 11:45க்கு உள்ளாக ஒரு நெல்லிக்காய் செடிக்கு மலை நெல்லிக்காய் செடிக்கு பூஜை செய்வது மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்பதற்கு சமமாக கருதப்படுகிறது.
குலதெய்வம் தெரியாதவர்கள் அல்லது பண தட்டுப்பாடு அதிகம் உள்ளவர்கள் இதுபோன்ற அனுஷ நட்சத்திர நாட்களில் மகாலட்சுமிக்கு நெல்லிக்காயை வைத்து வணங்குதல் அல்லது நெல்லி மரம் இருக்கக்கூடிய இடத்திற்கு சென்று சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வாசனை திரவியங்கள் பூசப்பட்டு மல்லிகை பூவை வைத்து பச்சைக் கற்பூரம் ஏற்றப்பட்டு மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வரச்சொன்னால் கண்டிப்பாக மகாலட்சுமி வரும் என்பது ஒரு ஐதீகம்.
குலதெய்வம் தெரியாதவர்களும் இதை செய்யலாம் அதுமட்டுமில்லாமல் இந்த சுக்கிர திசை பலன் கொடுக்கவில்லை என்று நினைப்பவர்களும் இதை செய்யும் பொழுது சுக்கிர திசை அவர்களுக்கு பலன் கொடுக்கும் மேலும் வெளிநாடு சென்று சரியான முறையில் வேலை கிடைக்காமல் வருமானம் கிடைக்காமல் இருப்பவர்களும் இந்த அனுஷம் திருவிழாவை சரியான முறையில் இவர்கள் தொடர்ச்சியாக மூன்று அனுஷ நட்சத்திர நாளில் செய்யப்பட்டால் இவர்களுக்கு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது உண்மையான உண்மை நம்பிக்கை இருப்பின் தாங்கள் செய்து பாருங்கள் வெற்றி உங்கள் கையில்.
அன்புடன்
டாக்டர் ஏ.ஸ் மஹா ஶ்ரீ ராஜன்
மவ சிவ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.